✠ வணக்கமாத தியான சிந்தனைகள் ✠
இந்த வணக்கமாதங்களைச் சத்திய திருச்சபையிலுள்ளோர் தங்கள் தங்கள் பத்திக்குத் தகுந்தவண்ணம் அநுசரித்துக் கொண்டாடிவருவதால் அவர்களாத்தும சரீரங்களுக்குண்டாகும் நன்மை வரங்களைக் கணக்கிடவும் அவைகள் யாவையும் விஸ்திரித்துச் சொல்லவும் நம்மால் ஏலுந்தரமல்ல!
மார்ச் - புனித சூசையப்பர் வணக்கமாதம்
01, அர்ச். சூசையப்பர் உயர்ந்த நிலைக்கு தெரிந்து கொள்ளப்பட்டதை தியானிப்போம்.
02, புனித சூசையப்பர் பிறந்ததை தியானிப்போம்.
03, புனித சூசையப்பருக்கு பெயரிட்டதை தியானிப்போம்.
04, புனித சூசையப்பர் தச்சுத்தொழில் செய்ததை தியானிப்போம்.
05, புனித சூசையப்பர் கன்னிமரியை திருமணம் செய்ததை தியானிப்போம்.
06, புனித சூசையப்பர் சந்தேகப்பட்டதை தியானிப்போம்.
07, புனித சூசையப்பர் மரியன்னையை ஏற்றுக் கொண்டதை தியானிப்போம்.
08, புனித சூசையப்பர் குழந்தையாய் பிறந்த இயேசுவை ஆராதித்ததை தியானிப்போம்.
09, புனித சூசையப்பர் குழந்தை இயேசுவை தன் மகனாக வளர்த்ததை தியானிப்போம்.
10, புனித சூசையப்பர் குழந்தை இயேசு பிறந்த 8-ஆம் நாள் இயேசு என பெயர் சூட்டியதை தியானிப்போம்.
12, புனித சூசையப்பர் அளவில்லாத துன்பங்கள் அனுபவித்ததை தியானிப்போம்.
13, புனித சூசையப்பர் எகிப்து நாட்டிற்கு போனதை தியானிப்போம்.
14, புனித சூசையப்பர் எகிப்து நாட்டில் வசித்ததை தியானிப்போம்.
15, பரிசுத்த திருக்குடும்பம் எகிப்து நாட்டிலிருந்து திரும்பி வந்ததை தியானிப்போம்.
16, புனித சூசையப்பர் காணாமல் போன இயேசுவை கோவிலில் கண்டதை தியானிப்போம்.
17, இயேசு புனித சூசையப்பருக்கும் மரியன்னைக்கும் கீழ்ப்படிந்ததை தியானிப்போம்.
18, அர்ச்.சூசையப்பர் நாசரேத்தூரில் வசித்ததை தியானிப்போம்.
20, அர்ச்.சூசையப்பர் தனிப்பட்ட அந்தரங்க வாழ்விற்கு நன்மாதிகையாய் இருக்கிறதை தியானிப்போம்.
21, அர்ச்.சூசையப்பர் கிறிஸ்தவர்களுடைய குடும்பங்களுக்கு பாதுகாவலாய் இருக்கிறார் என்பதை தியானிப்போம்.
22, அர்ச்.சூசையப்பரின் முதுமையை தியானிப்போம்.
23, அர்ச்.சூசையப்பர் சேசு மாமரியன்னையின் கரங்களில் நன்மரணம் அடைந்ததை தியானிப்போம்.
24, அர்ச்.சூசையப்பர் நன்மரணத்திற்கு முன்மாதிரியும் ஆதரவும் இருப்பதை தியானிப்போம்.
25, அர்ச்.சூசையப்பர் மகிமைப்படுத்தப்பட்டதை தியானிப்போம்.
26, அர்ச்.சூசையப்பர் மோட்சத்தில் மேலான மகிமையும் அதிகாரமும் அடைந்துள்ளதை தியானிப்போம்.
27, அர்ச்.சூசையப்பர் பூவுலகில் மகிமையும் அதிகாரமும் அடைந்ததை தியானிப்போம்.
29, அர்ச்.சூசையப்பருடைய ஏழு துன்பங்களையும் ஏழு சந்தோசங்களையும் தியானிப்போம்.
30, அர்ச்.சூசையப்பரை குறித்த செபங்களையும், நற்செயல்களையும் தியானிப்போம்.
31, அர்ச்.சூசையப்பர்மேல் நாம் வைக்கவேண்டிய பக்தியையும் வணக்கத்தையும் தியானிப்போம்.
ஏப்ரல் - நற்கருணை மற்றும் பரிசுத்த ஆவியானவரின் வணக்கமாதம்
00, தேவநற்கருணையைச் சந்திக்கிற வகை!
01, தாகமுள்ளவன் நம்மிடத்தில் வரக்கடவான்.
02, பரலோக அப்பத்தை அவர்களுக்குத் தந்தருளினார்!
03, மனுமக்களோடு கூட இருக்கிறதே நமக்குப் பிரியம்!
04, அவருடைய திருவிலாவில் கசப்பும், அவருடைய உறவில் சலிப்புமில்லை!
06, உங்கள் பொக்கிஷமுள்ள இடத்தில் உங்கள் இருதயமும் கூட இருக்கும்!
07, இதோ உலக முடியுமளவும் நாம் உங்களோடு இருக்கிறோம்!
08, என் அன்புக்குரியவளே, என் சௌந்தரியே, எழுந்து விரைந்து வா!
09, மார்போடு அணைக்கப்படுவீர்கள்!
10, நம்மை அடைந்தவன் சீவியம் அடைவான்!
11, நாம் நல்ல ஆயனாக இருக்கிறோம்!
12, சர்வேசுரன் அளவில்லாத சிநேகமாயிருக்கிறார்!
13, என் கண்களும் இருதயமும் எப்போதும் இதில் இருக்கும்!
14, இது நாம் எப்பொழுதும் இளைப்பாறும் இடமென்று இதை நாம் தெரிந்து கொண்டதினால், இதில் வாசம் செய்வோம்!
15, நாம் உலகத்தில் அக்கினியைக் கொளுத்தும் படி அல்லவோ வந்தோம்!
16, கலாத்தென்ற மலையில் பரிமள தைலங்கள் அற்றதோ?
17, சிநேகிதர் ஒருவர் ஒருவர் முகத்திற்கு முன்பாக இருக்கிறது மகா இன்பமாயிருக்கிறது!
19, இந்தக் கண்ணீர்க் கணவாயிலே துக்கச் சமுத்திரத்தில் அமிழ்ந்தியிருக்கிற நமக்கு ஆறுதல்!
21, சரீரம் இருக்கிறவிடத்தில் அண்டரண்ட பட்சிகளும் சேரும்!
23, எனக்கு வரும் நன்மை எல்லாம் தேவநற்கருணையைக் கொண்டு வருகிறதென்று கண்டேன்!
24, நீர் மெய்யாகவே மறைந்திருக்கும் தேவனாயிருக்கிறீர்!
25, சேசுநாதர் மரணபரியந்தம் தமது நித்திய பிதாவாகிய சர்வேசுரனுக்குக் கீழ்ப்படிந்திருந்தார்!
27, கிறீஸ்துவர்கள் ஆராதிக்கும் தேவன் அவர்களோடு கூட பிரசன்னமாயுள்ளார்!
28, பரலோக பிதா தமக்குள்ளதெல்லாம் தமது ஏகசுதனுக்குத் தந்தருளினார்!
மே - தேவமாதா வணக்கமாதம்
01, தேவமாதா சர்வேசுரனால் தெரிந்துகொள்ளப்பட்டதை தியானிப்போம்.
02, ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த தேவதாயின் மகிமையைத் தியானிப்போம்.
03, தேவமாதா பிறந்ததை தியானிப்போம்.
04, தேவமாதாவின் திருநாமத்தை தியானிப்போம்.
05, தேவமாதா தம்மைக் காணிக்கையாக சர்வேசுரனுக்கு ஒப்புக்கொடுத்ததை தியானிப்போம்.
06, தேவாலயத்தில் தேவமாதாவின் ஜீவியத்தை தியானிப்போம்.
07, சம்மனசானவர் தேவமாதாவுக்கு மங்கள வார்த்தை சொன்னதை தியானிப்போம்.
08, கர்த்தர் மனித அவதாரம் எடுத்த பரம இரகசியத்தில் பரிசுத்த கன்னிமரியாயின் மகிமையை தியானிப்போம்.
09, கர்த்தர் மனித அவதாரம் எடுக்கும்போது தேவமாதா அனுசரித்த சுகிர்த புண்ணியங்களை தியானிப்போம்.
10, வானதூதர் சொன்ன மங்கள வார்த்தையைத் தியானிப்போம்.
11, தேவமாதா எலிசபெத்தம்மாளை சந்தித்ததைத் தியானிப்போம்.
13, தேவமாதா உலக மீட்பர் வருகைக்கு காத்திருந்ததைத் தியானிப்போம்.
15, கர்த்தர் பிறந்ததைத் தியானிப்போம்.
16, தேவமாதாவின் சுத்திகரத்தை தியானிப்போம்.
17, திருக்குடும்பமாகிய சேசுநாதர், தேவமாதா, சூசையப்பர் இந்த உலகத்தில் சஞ்சரித்ததை தியானிப்போம்.
18, தேவமாதா தமது திருமைந்தனிடம் அடைந்த சந்தோஷத்தைத் தியானிப்போம்.
19, தேவமாதாவுக்கு வியாகுலம் உண்டாக்கின மூன்று முகாந்திரங்களைத் தியானிப்போம்.
20, தேவமாதாவின் கடைசி வியாகுலங்களைத் தியானிப்போம்.
22, இயேசுக்கிறிஸ்துநாதர் மோட்சத்துக்கு எழுந்தருளின பிற்பாடு தேவமாதா ஜீவித்த ஜீவியத்தை தியானிப்போம்.
23, தேவமாதா பூர்வீக கிறிஸ்தவர்களுக்குச் செய்த உதவிகளைத் தியானிப்போம்.
24, தேவமாதாவின் திரு மரணத்தைத் தியானிப்போம்.
25, தேவமாதா உயிர்த்ததை தியானிப்போம்.
26, தேவமாதா மோட்சத்துக்கு எழுந்தருளினதைத் தியானிப்போம்.
27, ஜென்மப் பாவமில்லாமல் உற்பவித்த தேவமாதாவின் மாசற்ற இருதயத்தைத் தியானிப்போம்.
28, தேவமாதாவைக் கண்டு பாவித்தலைத் தியானிப்போம்.
29, தேவமாதாவின் பேரில் வைக்க வேண்டிய நம்பிக்கையைத் தியானிப்போம்.
30, தேவமாதாவுக்குச் செலுத்த வேண்டிய பக்தி வணக்கத்தின் நிலைமையைத் தியானிப்போம்.
ஜூன் - இயேசுவின் திருஇருதய வணக்கமாதம்
00, இயேசுவின் திரு இருதய வணக்க மாதம்.
02, திருஇருதயப் பக்தி எதில் அடங்கியிருக்கிறது.
03, இயேசுவின் திருஇருதயப் பக்தியால் விளையும் பயன்கள்.
04, இயேசுவின் திருஇருதயமும், பரிசுத்த தேவ நற்கருணையும்.
05, இயேசுவின் திருஇருதயமானது நம் பாவத்தை வெறுத்து விலக்கப் படிப்பிக்கும் ஆசிரியர்.
07, இயேசுவின் திருஇருதயம் தாழ்ச்சிக்கு ஆசிரியர்.
08, இயேசுவின் திருஇருதயம் பிறரன்புக்கு ஆசிரியர்.
09, இயேசுவின் திருஇருதயம் ஆத்தும இரட்சண்ய ஆவலுக்கு மாதிரிகை.
10, இயேசுவின் திருஇருதயம் விசுவாச வாழ்விற்கு ஆசிரியர்.
11, மரண அவஸ்தைப்பட்ட இயேசுவின் திருஇருதயம்.
12, இயேசுவின் திருஇருதயம் உண்மையான மகிமையை கொடுக்கிறது.
13, இயேசுவின் திருஇருதயம் உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்களின் ஆறுதல்.
14, இயேசுவின் திருஇருதயம் நசரேத்து வாழ்வில் நமக்கு முன்மாதிரிகை.
15, இயேசுவின் திருஇருதயம் தேவ வணக்கத்துக்கும் தேவ பயத்துக்கும் ஆசிரியர்.
16, இயேசுவின் திருஇருதயம் நமது புண்ணிய வளர்ச்சிக்கு மாதிரிகை.
17, இயேசுவின் திருஇருதயம் சிறந்த இறை பணிக்கு மாதிரிகை.
18, இயேசுவின் திருஇருதயம் கிறிஸ்துவினிடத்தில் விளங்க வேண்டிய திடத்துக்கு மாதிரிகை.
19, இயேசுவின் திருஇருதயம் தேவ சந்நிதானத்தை நாம் நினைக்கக் கற்பிக்கிறது.
20, இயேசுவின் திருஇருதயம் குடும்பத்தில் விளங்க வேண்டிய பக்திக்கு மாதிரிகை.
21, இயேசுவின் திரு இருதயம் தேவ சித்தத்திற்கு அமைதலைக் கற்பிக்கிறது.
22, இயேசுவின் திருஇருதயம் அநித்திய நித்திய காரியங்களை நாம் மதிக்கக் கற்பிக்கிறது.
23, இயேசுவின் திருஇருதயம் பொறுமைக்கு மாதிரிகை.
24, இயேசுவின் திருஇருதயம் கீழ்ப்படிதலுக்கு மாதிரிகை.
25, இயேசுவின் திருஇருதயம் நிந்தை அவமானங்களை மன்னிக்கக் கற்பிக்கிறது.
26, இயேசுவின் திருஇருதயம் நீதிக்கு மாதிரிகை.
27, இயேசுவின் திரு இருதயம் பரித்தியாகத்துக்கு மாதிரிகை.
28, இயேசுவின் திரு இருதயம் முகத்தாட்சண்யத்தை விலக்கி நடக்கப் படிப்பிக்கிறது.
29, இயேசுவின் திருஇருதயத்தின் மட்டில் புனித இராயப்பர் வைத்த அன்பு.
ஆகஸ்ட் - அர்ச். அந்தோனியார் வணக்கமாதம்
01. அர்ச். அந்தோனியாருடைய மேலான மகிமை!
02. அர்ச். அந்தோனியாருடைய பிறப்பு!
03. அர்ச். அந்தோனியாருடைய கல்வித் தேர்ச்சி!
04. அர்ச். அந்தோனியாருடைய அழைப்பு!
05. அர்ச். அந்தோனியாருக்கு மரோக்கு தேசத்தில் நடந்த நிகழ்ச்சிகள்!
06. மோந்த்தே பாவோலோ மடத்தில் நடந்த வரலாறு!
07. அர்ச். அந்தோனியாருடைய பிரசங்கம்!
08. அர்ச். அந்தோனியாருடைய சிநேகிதர்!
09. பிரஞ்சு ராச்சியத்தில் அர்ச். அந்தோனியார் நடத்தின காரியங்கள்!
10. அர்ச். அந்தோனியாரும் தேவமாதா மோட்சத்திற்கு எழுந்தருளின தேவ இரகசியமும்!
11. அர்ச். அந்தோனியார் புயி பட்டணத்தில் நடத்தின வரலாறுகள்!
12. பூர்ஜ் பட்டணத்தில் நடந்த நிகழ்ச்சிகள்!
14. ஆர்ல் பட்டணத்தில் நடந்த நிகழ்ச்சிகள்!
15. அர்ச். அந்தோனியாரும் பிள்ளைகளும்!
16. அர்ச். அந்தோனியாரும் திருக்குழந்தையான சேசுநாதரும்!
17. பிரிவ் பட்டணத்துக் கெபிகள்!
19. அர்ச். தேவமாதா தரிசனையானது!
20. ஒரு மொழியில் பேசியதை பலமொழிகளில் மக்கள் கேட்ட புதுமை! உரோமாபுரியில் நடந்த நிகழ்ச்சிகள்!
21. வண்டிக்காரனின் மகனின் இறந்த பிரேதத்தை உயிர்ப்பித்த புதுமை!
22. கடலின் மச்சங்களுக்குப் பிரசங்கம் செய்த புதுமை!
23. 12 திருடர்கள் மனந்திரும்பின புதுமை!
24. எஸ்ஸெலினோ என்னும் கொடுங்கோல் மன்னன் மனந்திரும்புதல்!
25. மூன்று மாதக் குழந்தை சாட்சி சொன்ன புதுமை!
26. வெட்டின கால் ஒட்டின புதுமை!
27. அர்ச். அந்தோனியாருடைய பாக்கியமான மரணம்!
28. அர்ச். அந்தோனியாருடைய அடக்கத்தின்போது நடந்த நிகழ்ச்சிகள்!
29. அர்ச்சியசிஷ்ட பட்டங் கொடுக்கப்பட்ட வரலாறு!
30. போர்த்துக்கல், பிரஞ்சு, இத்தாலியா தேசங்கள் அர்ச். அந்தோனியார் பேரில் பக்தி!
அக்டோபர் - ஜெபமாலை மாதா வணக்கமாதம்
01, ஜெபமாலையினால் யாவருக்கும் பயன்.
11, கபிரியேல் மங்கள வார்த்தை சொல்லுதல்.
12, கன்னிமரி எலிசபெத்தம்மாளை வினவுகிறார்.
14, கர்த்தரை தேவாலயத்தில் ஒப்புக் கொடுக்கிறார்கள்.
15, காணாமல் போன கர்த்தரை தேவாலயத்தில் கண்டடைதல்.
16, கர்த்தர் பூங்காவனத்தில் இரத்த வேர்வை வியர்க்கிறார்.
17, கர்த்தர் கற்றூணில் கட்டுண்டு அடிபடுகிறார்.
18, சேசுவின் திருச்சிரசில் முள்முடி சூட்டுகிறார்கள்.
19, திவ்விய சேசு சிலுவை சுமந்து செல்கிறார்.
20, இயேசுநாதர் சிலுவையில் உயிர் விடுகிறார்.
21, கர்த்தர் உயிர்த்தெழுந்தார்.
22, கர்த்தர் மோட்சத்திற்கு ஆரோகணமாகிறார்.
25, மாமரி பரலோக பூலோக அரசியாக முடிசூட்டப்படுகிறார்.
26, தேவ இரகசியங்களைச் சிந்திப்பதின் இலாபம்.
27, செபமாலை உத்தமத்தனத்தின் பாதை.
28, செபமாலையும் அர்ச் சூசையப்பரும்!
நவம்பர் - உத்தரிக்கிற ஆத்துமாக்களின் வணக்கமாதம்
01, சாவுக்குப் பின் மூன்று ஸ்தலம் உண்டென்று காண்பிக்கும் பொது விளக்கமாவது.
02, உத்தரிக்கிற ஸ்தலம் இருக்கிறதென்று சகலமான ஜனங்களும் ஒத்துக் கொண்ட சத்திய விசேஷமாம்!
03, உத்தரிக்கிற ஸ்தலம் உண்டென்கிறது திருச்சபையின் சத்திய விசுவாசமாம்.
04, உத்தரிக்கிற ஸ்தலம் இருக்கிறதென்பது உள் நியாயங்களினால் காணப்படுகிற சத்தியமாம்.
05, உத்தரிக்கிற ஸ்தலத்தில் ஆத்துமாக்கள் படுகிற வேதனைகளைக் குறிக்கிற விளக்கமாவது.
06, உத்தரிக்கிற ஸ்தலத்து ஆத்துமாக்கள் சர்வேசுரனைக் காணாமல் படுகிற வேதனையைக் காண்பிக்கிற விளக்கமாவது.
07, உத்தரிக்கிற ஆத்துமாக்கள் நெருப்பில் வேதனைப்படுகிற விளக்கமாவது.
08, உத்தரிக்கிற ஆத்துமாக்கள் எத்தனை காலம் உத்தரிக்கிறார்கள் என்று காண்பிக்கிற வகையாவது.
10, எண்ணிறந்த ஆத்துமாக்கள் உத்தரிக்கிற ஸ்தலத்தில் உபாதிக்கப்படுவதாகக் காண்பிக்கிற விளக்கமாவது.
11, உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி பண்ண வேணுமென்கிற காரணங்களைக் காண்பிக்கிற பொது விளக்கமாவது.
16, உத்தரிக்கிற ஆத்துமாக்கள் நமக்குச் சொந்தமான ஆத்துமாக்கள் என்று காண்பிக்கிற விளக்கமாவது.
17, உத்தரிக்கிற ஆத்துமாக்கள் இடும் பிரலாபங்களைக் காண்பிக்கிற வகையாவது.
21, உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு எப்படி உதவி செய்யலாம் என்று காண்பிக்கிற விளக்கமாவது.
22, உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிற முதல் வழி செபமாம்.
23, உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிற இரண்டாம் வழி தர்மமாம்!
24, உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிற மூன்றாவது வழி தவக்கிரியையாம்.
25, உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிற நாலாம் வழி திருச்சபையின் பலன்களை அடைதலாம்.
27, உத்தரிக்கிற ஆத்துமாக்களுக்கு உதவி சகாயம் பண்ணுகிற ஐந்தாம் வழி திவ்விய பூசையாம்.
30, உத்தரிக்கிற ஸ்தலத்தை நினைத்து தியானிக்கிறது எவ்வளவு நல்லதென்று காண்பிக்கிற விளக்கமாவது.